WiFi தொடர்ந்து துண்டிக்கப்படுகிறதா? அல்லது இன்டர்நெட் Slow ஆகிறதா? இதோ முக்கியமான காரணங்களும் எளிய தீர்வுகளும்!
அதிக சாதனங்கள், ரௌட்டர் இடம், பழைய டிரைவர்கள் போன்ற காரணங்களால் WiFi பிரச்சினைகள் ஏற்படலாம். இந்த கட்டுரையில் முக்கிய காரணங்களும் அவற்றிற்கான எளிய தீர்வுகளும் விளக்கப்பட்டுள்ளன.
உங்களுக்கு முக்கியமான வேலை செய்யும் நேரத்தில் அல்லது படிக்கும்போது, திடீரென ஏற்படும் WiFi துண்டிப்பு பெரிதும் சிரமமாக இருக்கும். WiFi இப்படி தொடர்ந்து துண்டிக்க காரணமானவை மற்றும் அதற்க்கான தீர்வுகள் கீழே தொகுத்து வழங்கி உள்ளேன்.
1.மிக அதிகமான சாதனங்கள் இணைந்திருப்பது
ஒரு வீட்டில் பல கணினிகள், ஸ்மார்ட்போன்கள், டேப்-போடுகள், ஸ்மார்ட் TVகள் மற்றும் பல சாதனங்கள் WiFi-வுக்கு இணைக்கப்படுகின்றன. ஒரே நேரத்தில் பல சாதனங்கள் இணைந்திருந்தாலும் அல்லது அவை பயன்பாட்டில் இல்லாவிட்டாலும் அவைகளின் ஒரு பகுதி வலயத்தை பயன்படுத்தும். இதனால் WiFi slow ஆகவோ அல்லது தொடர்ந்து துண்டிக்கப்படவோ (disconnect) ஆகலாம்.
தீர்வு: தேவையற்ற சாதனங்களை WiFi-இலிருந்து துண்டிக்கவும். கடைசியாக Password மாற்றி மறுபடியும் சாதனங்களை இணைக்கவும்.
2.ரௌட்டர் (Router) சரியான இடத்தில் வைக்கப்படாமை
Router கடைசியில் உள்ள அறையில் அல்லது மூடப்பட்ட தளத்தில் இருந்தால், உங்கள் சாதனம் இணைக்கப்படும் இடம் ரௌட்டருக்கு மிகவும் தொலைவில் இருக்கலாம். இதனால் உங்கள் Device இல் இன்டர்நெட் slow ஆகும்.
தீர்வு: ரௌட்டரை பயன்படுத்தப்படும் இடம் அருகேயும், உயர்ந்த இடத்திலும் வையுங்கள். மறைவாக இல்லாத படி வையுங்கள்.
3.உங்கள் சாதனத்தின் வயர்லெஸ் டிரைவர்கள் பழையதாக இருக்கலாம்
கணினி அல்லது லேப்டாப்பில் வயர்லெஸ் டிரைவர்களை புதுப்பிக்காமல் இருந்தால், இணைப்பு பிரச்சினைகள் ஏற்படலாம்.
தீர்வு: சாதன உற்பத்தியாளர் இணையதளத்தில் சென்று வயர்லெஸ் டிரைவர்களை புதுப்பிக்கவும்.
4.Router க்கும் ஓய்வு வேண்டும்
ரௌட்டர் தொடர்ந்து பல நாள் இயங்கி கொண்டிருந்தாலும் இன்டர்நெட் slow மற்றும் Disconnect ஆகும்.
தீர்வு: தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் ரௌட்டரை அணைத்து சில நிமிடங்கள் கழித்து மீண்டும் இயக்கவும். உங்கள் இன்டர்நெட் மேம்படுவதை நீங்கள் பார்க்கலாம்.
5.புதிய ரௌட்டர்
அணைத்து முயற்சிகள் செய்த பிறகும் உங்கள் இன்டர்நெட் Slow ஆக இருந்தால்,
தீர்வு: தொடர்ந்து இன்டர்நெட் பிரச்சனை இருந்தால், உங்கள் பழைய ரௌட்டரை மாற்றி புதிய ஒன்றை இன்ஸ்டால் செய்யவும் அல்லது வாடிக்கையாளர் சேவையாளர் வழியாக சோதிக்கவும்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0